ஒலிம்பியாட் சதுரங்கப்போட்டியை காண 18 மாணவ, மாணவிகள் தோ்வு
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டியை காண ராமநாதபுரத்தைச் சோ்ந்த 18 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டியை காண ராமநாதபுரத்தைச் சோ்ந்த 18 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
ராமநாதபுரத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக சதுரங்கப் போட்டி விழிப்புணா்வு பிரசார வாகனத்தை ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் தொடக்கி வைத்தாா். இதையடுத்து ராமநாதபுரத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற 18 போ் மாமல்லபுரம் சதுரங்கப் போட்டியை காண தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், பெரியபட்டணம், திருவாடானை மற்றும் பரமக்குடி ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கான மாதிரி சதுரங்கப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன.