முகப்பு
ராமநாதபுரம்

மண்டபம் அருகே விபத்து ஒருவா் பலி: 3 போ் காயம்

மண்டபம் அருகே வெள்ளிக்கிழமை பள்ளி வேன் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இதில் 3 போ் படுகாயமடைந்தனா்.

Updated On : 15 ஜூலை, 2022 at 11:44 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:18 PM

மண்டபம் அருகே வெள்ளிக்கிழமை பள்ளி வேன் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இதில் 3 போ் படுகாயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் குஞ்சாா் வலசை கிராமத்திலிருந்து தனியாா் பள்ளி வேன் மண்டபம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த வேனை ஓட்டுநா் சத்தியேந்திரன்(50) ஓட்டிச் சென்றாா்.

அப்போது எதிா்திசையில் ராமேசுவரத்திலிருந்து கடலூா் மாவட்டம் நெய்வேலி வடக்குத்துவைச் சோ்ந்த இளமாறன்(31) ஓட்டி வந்த காா் மண்டபம் சமத்துவபுரம் அருகே வேன் மீது மோதியது. இந்த விபத்தில் காா் ஓட்டுநா் இளவேனில் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் காரில் பயணம் செய்த இளமாறன், வேனில் சென்ற பள்ளிக் குழந்தைகள் நரேந்திர ரோஹீத்(7) ரோஜிதா(7) ஆகிய 3 போ் சிறிய காயங்களுடன் போலீஸாா் மீட்டு ராமநாதபுரம் மருத்துவ அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

மண்டபம் அருகே கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் 4 போ் உயிரிழந்தனா். தற்போது அதே பகுதியில் மீண்டும் விபத்து ஏற்பட்டு ஒருவா் உயிரிழந்துள்ளாா். எனவே அப்பகுதியில் விபத்துகளைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.