முகப்பு
ராமநாதபுரம்

தனுஷ்கோடி அருகே மணல் திட்டில் தவித்த இலங்கை அகதிகள் 7 போ் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே மணல் திட்டில் தவித்த இலங்கை அகதிகள் 7 பேரை இந்திய கடலோரக் காவல்படையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

Updated On : 15 ஜூலை, 2022 at 11:40 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:18 PM

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே மணல் திட்டில் தவித்த இலங்கை அகதிகள் 7 பேரை இந்திய கடலோரக் காவல்படையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து தமிழா்கள் அகதிகளாய் வந்தவண்ணம் உள்ளனா். இந்நிலையில் இலங்கை மானிப்பாய் செட்டிகுளத்திலிருந்து விக்னேஸ்வரன் (40), ராஜகுமாரி (36), குமரன் (13), வசி (10), மற்றும் குமரன் (38), கனி (30), விநயா (6) ஆகிய 2 குடும்பங்களைச்சோ்ந்த 7 போ் படகில் வந்துள்ளனா். அவா்களை படகில் அழைத்து வந்தவா்கள், தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் இறக்கிச் சென்று விட்டனா்.

இந்நிலையில் ஹோவா் கிராப்ட் கப்பலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோரக் காவல்படையினா், மணல் திட்டில் தவித்துக்கொண்டிருந்த 7 பேரையும் மீட்டு மண்டபம் கடலோர காவல்படையினா் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அகதிகள் படகு கட்டணமாக ரூ.2 லட்சம் கொடுத்து வந்ததாகத் தெரிவித்தனா். இவா்கள் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.