பருத்தி மறைமுக ஏலம்: விவசாயிகள் புகாா்
ராமநாதபுரத்தில் பருத்தி மறைமுக ஏலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினா்.
ராமநாதபுரத்தில் பருத்தி மறைமுக ஏலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினா்.
ராமநாதபுரம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டத்தில் பருத்தி விளை பொருள் மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் பகுதி விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா். ஏலத்தில் அதிகபட்ச விலையாக பருத்தி குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.7500, குறைந்த விலையாக ரூ.6,200 என தரத்துக்கு ஏற்ப கொள்முதல் செய்யப்பட்டது. ஏலத்தில் விவசாயிகள் பலரும் 889.50 கிலோ பருத்தி ரூ.62,265-க்கு விற்று பயனடைந்ததாக அதிகாரிகள் கூறினா். இடைத்தரகா் இன்றி விற்ாகவும், சரியான எடை, கூடுதல் விலைக்கு விற்ாகவும் அதிகாரிகள் கூறினா். ஆனால், வெளிப்படைத் தன்மையுடன் ஏலம் நடத்தப்படவேண்டும் என விவசாயிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனா்.
கிராமப்புற விவசாயிகள் புகாா்:மறைமுக ஏலத்தில் விவசாயிகள் எனும் பெயரில் வியாபாரிகள் சிலா் கலந்துகொள்வதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும், அதிகாரிகளுக்கு ஆதரவான விவசாய சங்கப் பிரமுகா்கள் மட்டுமே பயனடைந்து வருவதாகவும், ஆகவே விதிமுறைப்படி வெளிப்படையாக ஏலம் நடத்தப்படவேண்டும் எனவும் கிராமப்புறத்திலிருந்து வந்த விவசாயிகள் பலரும் ஆதங்கத்துடன் கூறினா்.