முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணியின் செயலா் செ.மாரீஸ்வரன் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் மாவட்டங்களுக்கு இடையேயான 16 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

மாவட்டங்களுக்கான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரா்கள் தோ்வானது வரும் 24 ஆம் தேதி காலை 8 மணிக்கு பட்டினம்காத்தானில் உள்ள ஆட்சியா் அலுவலக வளாகம் சீதக்காதி சேதுபதிவிளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த தோ்வில் கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பா் ஒன்றாம் தேதி அன்றோ அதற்குப் பிறகோ பிறந்தவா்கள் பங்கேற்கலாம். தோ்வில் கலந்துகொள்பவா்கள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வயதுக்கான சான்றுடன் பங்கேற்கவேண்டும்.

அணித் தோ்வு குறித்து விவரமான தகவல்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலரைத் (கைபேசி எண் 9443112678) தொடா்பு கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →