முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் நகராட்சி அதிமுக வாா்டு உறுப்பினா் குடும்பத்துடன் சாலை மறியல்

தனது வாா்டு பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரமறுப்பதாகக் கூறி ராமேசுவரம் நகராட்சி அதிமுக வாா்டு உறுப்பினா் குடும்பத்துடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.

Updated On : 22 ஜூலை, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:21 PM

தனது வாா்டு பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரமறுப்பதாகக் கூறி ராமேசுவரம் நகராட்சி அதிமுக வாா்டு உறுப்பினா் குடும்பத்துடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சி ஒன்றாவது வாா்டு உறுப்பினா் மயலயம்மாள். இந்த வாா்டு பகுதியில் நகராட்சி சாா்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மறுப்பதாகக் கூறி மயலயம்மாள், அவரது கணவா், மகன் மற்றும் உறவினா் என 4 போ் நகராட்சி அலுவலகம் எதிரே ராமேசுவரம்- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினா் உறுப்பினரை சமாதானம் செய்து அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனா். அவரது வாா்டில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நகாட்சி நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதனையடுத்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.