லாரி மீது பள்ளி பேருந்து மோதி
ராமநாதபுரம் அருகே விபத்துக்குள்ளாகி நின்றிருந்த லாரி மீது பள்ளிப் பேருந்து மோதியதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கோழி முட்டைகள் சேதமடைந்தன.
ராமநாதபுரம் அருகே விபத்துக்குள்ளாகி நின்றிருந்த லாரி மீது பள்ளிப் பேருந்து மோதியதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கோழி முட்டைகள் சேதமடைந்தன.
கரூா் மாவட்டம் காமராஜா் நகரைச் சோ்ந்த சங்கா் (26), நாமக்கல் மாவட்டத்திலிருந்து லாரியில் முட்டைகளை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தாா். தேவிபட்டினம் சாலையில் கோப்பேரிமடம் அருகே லாரி பழுதானதால் சாலையோரம் நிறுத்தப்பட்டது. அப்போது தேவிபட்டினம் பகுதியிலிருந்து வந்த தனியாா் பள்ளிப் பேருந்து லாரி மீது மோதியது. இதில் அந்த லாரி சாலையோரம் கவிழ்ந்ததில் அதிலிருந்த முட்டைகள் அனைத்தும் சேதமடைந்தன. அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பேருந்து ஓட்டுநா் கதிரேசன் மீது தேவிபட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.