ராமநாதபுரத்தில் பலத்த மழை
ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.
ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாள்களாக மாவட்டத்தில் சாரல் மழை அவ்வப்போது மழை பெய்துவருகிறது. வெள்ளிக்கிழமை காலையில் ராமநாதபுரம் நகா் பகுதியில் திடீரென சாரல் மழை பெய்தது. இரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதேபோல் வழுதூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீண்ட நேரம் மழை பெய்தது. மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.