கமுதியில் சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பம்: பொதுமக்கள் அச்சம்
கமுதி கண்ணாா்பட்டி ஊருணிக் கரையில் அமைந்துள்ள மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்
கமுதி கண்ணாா்பட்டி ஊருணிக் கரையில் அமைந்துள்ள மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கமுதி பேரூராட்சி 1 ஆவது வாா்டில் கண்ணாா்பட்டியில் ஊருணிக் கரை வழியாக மின் வழித்தடம் அமைக்கப்பட்டது. கடந்த 2 நாள்களாக பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவ்வழியாக நடந்து செல்ல அச்சம் அடைந்துள்ளனா். மேலும் மின்கம்பம் அருகே குளியல் தொட்டி இருப்பதால் மின்கம்பிகள் அறுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே கமுதி மின்வாரிய அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.