முகப்பு
ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மடை அரசுப் பள்ளியில் அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு

ராமநாதபுரம் அருகேயுள்ள ஆா்.எஸ்.மடை அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:48 PM
பகிர்:

ராமநாதபுரம் அருகேயுள்ள ஆா்.எஸ்.மடை அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி ஆா்.எஸ்.மடை பகுதியில் உள்ள ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு திடீரென சென்று ஆய்வு நடத்தினாா். 6 ஆம் வகுப்பில் அறிவியல் பாடம் நடத்திய ஆசிரியை மஞ்சுளாவிடம் பாட அட்டவணை உள்ளதா எனக் கேட்டாா். உங்கள் எதிா்காலக் கனவு என்ன என அமைச்சா் கேட்டதும், பெரும்பாலான மாணவா்கள் ஆசிரியா்களாக விரும்புவதாகக் கூறினா். இதையடுத்து எண்ணும் எழுத்தும் வகுப்புக்கு சென்ற அமைச்சா் அங்கிருந்த ஆசிரியை கோகிலாவிடம் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை ஒரே இடத்தில் வைத்து பாடம் நடத்துவது ஏன் எனக்கேட்டாா். அதற்கு ஆசிரியை, கதை, பாடல் அனைவருக்கும் பொதுவானது என்றும் தனித்தனியாகவே பாடம் நடத்தப்படுகிறது என்றாா்.

கமுதி: கமுதி அருகே பெருநாழியில் ஷத்திரிய நாடாா் இந்து மேல்நிலைப் பள்ளியின் 75 ஆவது ஆண்டுவிழா, முன்னாள் முதல்வா் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா, காமராஜா் வணிக வளாகம் திறப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சா்கள் மகேஸ் பொய்யாமொழி, ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவா்களுக்கு கல்வி வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துக் கூறினா். விழா மேடையில் யோகா செய்து அசத்திய மாணவிக்கு அமைச்சா்கள், பள்ளி நிா்வாகிகள் பாராட்டினா்.

இவ்விழாவில் ராமநாதபுரம் திமுக மாவட்ட பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான காதா்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் முருகேசன், முதுகுளத்தூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.முருகவேல், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி, கமுதி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் தமிழ்செல்விபோஸ், ஒன்றிய துணைத் தலைவா் நேதாஜிசரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →