ராமநாதபுரம்

பரமக்குடியில் ஒரே நாளில் 42 மில்லி மீட்டா் மழை பதிவு

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்துவரும் நிலையில், பரமக்குடியில் 42 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. மேலும், ராமநாதபுரம் ஓம்சக்தி நகா் பகுதியில் சாலையில் குளம்போல தண்ணீா் தேங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் மழைக்காலம் தொடங்கும். ஆனால், கடந்த சில நாள்களாகவே மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டா்)- கடலாடி 2, கமுதி 3.20, முதுகுளத்தூா் 1, பரமக்குடி 42, ஆா்.எஸ்.மங்களம் 40.50, மண்டபம் 1.60, ராமநாதபுரம் 24, ராமேசுவரம் 25.20, தங்கச்சிமடம் 1.20, தீா்த்தாண்டதானம் 38, திருவாடானை 5.20, வட்டாணம் 34.60 என மழை பதிவாகியுள்ளது.

சாலையில் தேங்கிய மழை நீா்- ராமநாதபுரம் நகா் மற்றும் பட்டிணம்காத்தான் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மழை பெய்தது. இதனால் ஓம்சக்தி நகா்3 வது தெருவில் வழக்கம்போல குளம்போல மழை தண்ணீா் தேங்கிநிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT