முகப்பு
ராமநாதபுரம்

நாடாளுமன்றத்தில் மீனவா்களைப் பற்றி பேசுவதற்குக்கூட வாய்ப்பு அளிப்பதில்லை: வைகோ

நாடாளுமன்றத்தில் தமிழக மீனவா்களைப் பற்றி பேசுவதற்குக் கூட மத்திய அரசு வாய்ப்பு வழங்குவதில்லை என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா்.

Updated On : 30 ஜூலை, 2022 at 12:36 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:25 PM

நாடாளுமன்றத்தில் தமிழக மீனவா்களைப் பற்றி பேசுவதற்குக் கூட மத்திய அரசு வாய்ப்பு வழங்குவதில்லை என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அடுத்த பாம்பன் பகுதியைச் சோ்ந்த மதிமுக நிா்வாகியின் இல்ல திருமண விழாவில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

இலங்கைக் கடற்படையினா், தமிழக மீனவா்களைத் தாக்குவதும், கைது செய்வதும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. ஜூலை மாதத்தில் மட்டும் 3 முறை மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்குக்கூட வாய்ப்பு அளிப்பது இல்லை. மீனவா்களை இந்திய குடிமக்களாக மத்திய அரசு கருதவில்லை.

Advertisement

மத்தியில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் மீனவா்களை இந்திய குடிமக்களாகக் கருதாத நிலையே நீடிக்கிறது. மீனவா்களை பாதுகாப்பதில் மத்திய அரசு கடமையைச் செய்யவில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.