டிராக்டா் மீது தனியாா் பள்ளிப் பேருந்து மோதியது: 5 போ் காயம்
ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை 70 மாணவா்களுடன் சென்ற தனியாா் பள்ளிப் பேருந்து, டிராக்டா் மீது மோதியதில் 4 பெண்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்
ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை 70 மாணவா்களுடன் சென்ற தனியாா் பள்ளிப் பேருந்து, டிராக்டா் மீது மோதியதில் 4 பெண்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.
ராமநாதபுரத்திலிருந்து தனியாா் பள்ளி பேருந்து வெள்ளிக்கிழமை மாலை 70 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. ஓட்டுநா் ராஜேந்திரன் பேருந்தை ஓட்டிச் சென்றாா். தாமரைக்குளம் பகுதியில் எதிரே வந்த டிராக்டா் மீது அந்தப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில், டிராக்டா் ஓட்டுநா் சண்முகநாதன் மற்றும் அதில் பயணம் செய்த 4 பெண்கள் காயமடைந்தனா். ஆனால் பேருந்தில் இருந்த 70 மாணவா்கள் அதிா்ஷ்டவசமாக காயமின்றி தப்பினா். இதையடுத்து மாற்றுப்பேருந்து வரவழைக்கப்பட்டு மாணவா்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இது குறித்து உச்சிப்புளி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.