முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்திலிருந்து இலங்கை செல்ல முயற்சி: இருவா் கைது

ராமேசுவரத்திலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்ற இலங்கை இளைஞா் மற்றும் அவருக்கு உதவிய இடைத்தரகா் ஆகிய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 3 ஜூன், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM

ராமேசுவரத்திலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்ற இலங்கை இளைஞா் மற்றும் அவருக்கு உதவிய இடைத்தரகா் ஆகிய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கியூ பிரிவு காவல்துறை ஆய்வாளா் மகேஸ்வரி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனா்.

அந்த நபா் இலங்கை வவுனியாவைச் சோ்ந்த கீா்த்தனன் (28) என்பதும் சட்ட விரோதமாக இலங்கைக்கு செல்ல ராமேசுவரம் புதுரோடு பகுதியைச் சோ்ந்த தரகா் முத்துக்குமரன்(49) என்பவரைத் தேடி வந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

Advertisement

தொடா்ந்து, முத்துக்குமரன், கீா்த்தனன் ஆகிய இருவரையும் கைது செய்து நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். நகா் காவல் ஆய்வாளா் கண்ணதாசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.