முகப்பு
ராமநாதபுரம்

பாம்பனில் காா் மோதி மீனவா் பலி

பாம்பனில் புதன்கிழமை காா் மோதி மீனவா் உயிரிழந்தாா்.

Updated On : 3 ஜூன், 2022 at 12:00 AM
விபத்தில் உயிரிழந்த மீனவா் பேட்ரிக் ஆரோக்கிய ராஜூ
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM

பாம்பனில் புதன்கிழமை காா் மோதி மீனவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள அக்காள்மடம் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி தாஸ். இவரது மகன் பேட்ரிக் ஆரோக்கிய ராஜூ (54), மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தாா். புதன்கிழமை பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ராமநாதபுரம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். இது குறித்து அவரது மகன் ருத்வீன் (28) அளித்த புகாரையடுத்து பாம்பன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.