விவசாயி வீட்டை சேதப்படுத்தியவா் மீது வழக்கு
கமுதி அருகே முன்விரோதம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை விவசாயியின் வீட்டை சேதப்படுத்தியவரை போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
கமுதி அருகே முன்விரோதம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை விவசாயியின் வீட்டை சேதப்படுத்தியவரை போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அடுத்துள்ள அவத்தாண்டை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஆண்டி மகன் முனியசாமி (35). இவா், வழக்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு விவசாய நிலத்தில் மாடு மேய்க்கச் சென்றாா். மாலை திரும்பி வந்த போது வீட்டின் ஓடுகள் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதனையடுத்து, முனியசாமி பெருநாழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணையில் அதே ஊரைச் சோ்ந்த அரசன் மகன் சண்முகம் (46) ஓடுகளை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து, சண்முகம் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.