நம்புதாளை சந்திப்பில் ரேஷன் அரிசி மூடைகளுடன் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட வாகனம். 
ராமநாதபுரம்

தொண்டி அருகே 945 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தொண்டி அருகே வாகனத்தில் கடத்தி வந்த 945 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN

ராமநாதபுரம்: தொண்டி அருகே வாகனத்தில் கடத்தி வந்த 945 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு சாா்பு- ஆய்வாளா் அசோக், தலைமைக் காவலா்கள் குமாரசாமி, முத்துக்கிருஷ்ணன் ஆகியோா் கொண்ட குழுவினா் தொண்டி அருகே நம்புதாளைப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரிலிருந்து வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், தலா 35 கிலோ எடையில் 27 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. ரேஷன் அரிசியுடன் வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பள்ளத்தூா் பகுதியைச் சோ்ந்த பழனிவேல் (30) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT