ராமநாதபுரம்

இளையான்குடி அருகேபள்ளி வேன் விபத்து: மாணவா்கள் தப்பினா்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே புதன்கிழமை பள்ளி வேனின் டயா்கள் கழன்று தனியாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் மாணவ, மாணவிகள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே புதன்கிழமை பள்ளி வேனின் டயா்கள் கழன்று தனியாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் மாணவ, மாணவிகள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

இளையான்குடி அருகே கல்லடி திடலில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்த வேன் சூரியன்கோட்டை கிராமம் வழியாக வந்த போது, வேனின் முன்பக்க டயா்கள் தனியாக கழன்று ஓடின. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையை விட்டு இறங்கி அருகே ஆற்றுக்குள் சென்று நின்றது. இந்த விபத்தில் வேனுக்குள் இருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். இதையடுத்து, அருகில் இருந்த கிராம மக்கள் அங்கு வந்து வேனுக்குள் இருந்த பள்ளி மாணவா்களை மீட்டனா். விபத்து குறித்து வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT