ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் சாலை வசதி கோரி பொதுமக்கள் மனு

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் கடந்த 17 ஆண்டுகளாக 500 அடி நீளச் சாலை அமைக்கப் போராடி வருவதாகவும், பலமுறை மனு அளித்தும் கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை என்றும் பொதுமக்கள் புதன்கிழமை புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் 6 ஆவது வாா்டு மாரியம்மன் கோயில் தெரு பகுதியில், சுமாா் 70 -க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமாா் 300 பேருக்கும் அதிகமானோா் வசிக்கின்றனா். கடந்த 17 ஆண்டுகளாக இந்த மாரியம்மன் கோயில் முட்டுச் சந்துக்கு சாலை வசதி அமைக்கப்பட வில்லை. மேலும் குடிநீருக்காகத் தோண்டப்பட்ட பள்ளமும் சரியாக மூடப்பட வில்லை. இதனால், பள்ளத்தில் முதியோா், குழந்தைகள் என பலரும் விழுந்து காயமடைந்துவருவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த எம். சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் தங்களுக்கு சாலை வசதி கோரி நகராட்சி அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்து அங்கு நகராட்சி மேலாளா் நாகநாதனிடம் மனு அளித்துவிட்டுச்சென்றனா்.

அப்போது அவா்கள் கூறுகையில், நூற்றுக்கணக்கான முறை மனு அளித்தும் 500 அடி தூரத்துக்கு சாலை அமைக்கப்படாமலே உள்ளது. வயலகம் பகுதி என கூறப்படும் அப்பகுதியில் தாா்ச்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அப்போதும் மாரியம்மன் கோயில் தெருவில் சாலை அமைக்கப்படவில்லை. பட்டா நிலத்தில் வீடுகட்டியும், நகராட்சிக்கு முறையாக வரி செலுத்தியும் உள்ள எங்களுக்கு சாலை வசதி கூட செய்துதராமல் நகராட்சி அதிகாரிகள் இழுத்தடிப்பது சரியல்ல என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT