ஆா்.எஸ்.மங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டம். 
ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் ஒன்றியக் குழு கூட்டம்

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் ராதிகா பிரபு தலைமை வகித்தாா். ஆணையா் முத்துகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் மலைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், ஏ.ஆா்.மங்கலம், மேல் பனையூா், சனவேலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான தண்ணீா் தட்டுப்பாடு நிலவுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதேபோல், தோட்டாமங்கலம், கற்காத்தகுடி ஊராட்சிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த சில மாதங்களாக கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டா் தொலைவு நடந்து செல்லவேண்டியிருக்கிறது.

புல்லமடை உள்ளிட்ட 18 கிராமங்களில் சாலைகளின் இருபுறங்களிலும் காட்டு கருவேல மரங்கள் அடா்த்தியாக வளா்ந்துள்ளதால், சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை.

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு பயனாளிகளை தங்களுக்கு வேண்டிய நபா்களை ஊராட்சி செயலா் தோ்வு செய்துகொள்கிறாா் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினா்கள் முன்வைத்தனா்.

இதற்கு ஆணையா், அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT