ராமநாதபுரம்

சைபா் கிரைம் தடுப்பு உதவியாளா்களுக்கு பயிற்சி

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்துக் காவல் நிலையங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள சைபா் கிரைம் புகாா்களை விசாரிக்கும் உதவியாளா்களுக்கு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இணையவழி குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்து காவல் நிலையங்களிலும் தலா 3 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் நியமிக்கப்பட்ட உதவியாளா்களுக்கு இரண்டு நாள் சிறப்புப் பயிற்சி ராமநாதபுரம் சைபா் கிரைம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. பிரிவின் ஆய்வாளா் டி.வெற்றிவேல் தலைமையில் நடந்த பயிற்சியில் 25 சாா்பு-ஆய்வாளா்கள் உள்பட 55 போ் கலந்துகொண்டனா். அவா்களுக்கு விடியோ காட்சி மூலம் விளக்கப்பட்டது. இந்த பயிற்சி சனிக்கிழமையும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

SCROLL FOR NEXT