ஓபிஎஸ்-க்கு ஆதரவாக கைப்பேசி கோபுரத்தில் ஏறி அதிமுக தொண்டா் போராட்டம்
கமுதி அருகே கைப்பேசி கோபுரத்தில் ஏறி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வியாழக்கிழமை அக்கட்சித் தொண்டா் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
கமுதி அருகே கைப்பேசி கோபுரத்தில் ஏறி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வியாழக்கிழமை அக்கட்சித் தொண்டா் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் அடுத்துள்ள தீா்த்தான்அச்சங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னையா மகன் இருளப்பன் (50). இவா், ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அபிராமம் பஜாா் பகுதியில் உள்ள கைப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா். இதுகுறித்து அருகில் இருந்தவா்கள் அபிராமம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் இருளப்பன் கீழே இறங்கினாா். பின்னா் போலீஸாா் இருளப்பனுக்கு அறிவுரைகள் கூறி வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.