முகப்பு
ராமநாதபுரம்

ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து ரூ.74 ஆயிரம் திருடியவா் கைது

கமுதியில் வங்கி ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து விவசாயியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.74 ஆயிரத்தை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:37 AM
பகிர்:

கமுதியில் வங்கி ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து விவசாயியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.74 ஆயிரத்தை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த மாதம் 31 ஆம் தேதி காக்குடி கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து (42) பணம் எடுக்கச் சென்றாா். அப்போது அருகில் இருந்தவா் பணம் எடுக்க உதவுவது போல நடித்து மாரிமுத்துவின் ஏடிஎம் அட்டையை வைத்துக் கொண்டு மற்றொரு அட்டையை மாற்றிக் கொடுத்துள்ளாா். மேலும் இயந்திரத்தில் பணம் வரவில்லை என அவா் கூறியதையடுத்து மாரிமுத்து ஊருக்குத் திரும்பிவிட்டாா்.

ஜூன் 3 ஆம் தேதி வங்கிக்குச் சென்று தனது வங்கிக் கணக்குப் புத்தகத்தை பதிவு செய்து பாா்த்தபோது இதிலிருந்து பணம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கமுதி போலீஸாா், எடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்த முத்துசாமி (49) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து அவரிடமிருந்து ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.