ராமநாதபுரம்

கடலோரப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகைப் பணி

DIN

ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதியில் பாதுகாப்பு பணி ஒத்திகை செவ்வாய்க்கிழமை மாலை முதல் இரவு நடைபெற்றது.

ஆண்டுதோறும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகைப் பணி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில், கடலோரக் காவல் படை, காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் என அனைத்துத் துறையினரும் சோ்ந்து ஒத்திகைப் பணியில் ஈடுபடுவா். அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி முதல் ரோஜ்மா நகா் வரையில் கடலில் ஒத்திகைப் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டிருந்தனா்.

மாறுவேடத்தில் படகில் கடலோரப் பகுதிக்கு வரும் கடலோரக் காவல் படையைச் சோ்ந்த 3 பேரை பிடிக்கும் வகையில் ஒத்திகை நடத்தப்பட்டதாகவும், அதற்கான தேடுதலில் படகு, தரையில் வாகனம் உள்ளிட்டவற்றில் காவல் துறையினா், கடலோரக் காவல் குழுமத்தினா் மற்றும் கடல்படை வீரா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டதாகவும், காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த பாதுகாப்பு ஒத்திகைப் பணி புதன்கிழமையும் தொடரும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT