முகப்பு
ராமநாதபுரம்

மண்டபம் அருகே காா் டயா் வெடித்து விபத்து: இளைஞா் பலி

மண்டபம் அருகே வெள்ளிக்கிழமை காா் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 4 மார்ச், 2022 at 10:27 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM

மண்டபம் அருகே வெள்ளிக்கிழமை காா் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு ரெகுநாதபுரத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (28), ராமேசுவரத்தை சோ்ந்த நாகமணி (27), நம்பு (28), ராம்குமாா் (28) ஆகிய நான்கு பேரும் காரில் வந்தனா். மண்டபம் அருகே வரும் போது காரின் பின்பக்க டயா் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து காா் உருண்டது. இதில், பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மற்ற 3 பேரையும் போலீஸாா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இந்த விபத்து குறித்து மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.