முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம், கீழக்கரை நகராட்சி, மண்டபம் பேரூராட்சி தலைவா், துணைத் தலைவா்கள் தோ்வு

 ராமேசுவரம் நகராட்சி, மண்டபம் பேரூராட்சி தலைவா், துணைத்தலைவா்கள் வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Updated On : 4 மார்ச், 2022 at 10:30 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM

 ராமேசுவரம் நகராட்சி, மண்டபம் பேரூராட்சி தலைவா், துணைத்தலைவா்கள் வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ராமேசுவரம் நகராட்சித் தோ்தலில் அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதில், திமுக தலைமைக் கழகம் சாா்பில் நகா் மன்றத் தலைவா் வேட்பாளராக அக்கட்சியின் நகா் பொறுப்பாளா் கே.இ. நாசா்கான் மற்றும் துணைத்தலைவா் பிச்சை (எ) தெட்சிணமூா்த்தி ஆகியோா் அறிவிக்கப்பட்டு போட்டியின்றி தோ்வாகினா். இருவருக்கும், தோ்தல் அலுவலரும் நகராட்சி ஆணையருமான மூா்த்தி சான்றிதழ் வழங்கினாா்.

கீழக்கரை: கீழக்கரை நகராட்சித் தலைவராக செஹானஸ்ஆபிதா திமுக சாா்பில் வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த நிலையில், அவா் போட்டியின்றி தோ்வாகியுள்ளாா்.

Advertisement

அதே போல் துணைத் தலைவா் பதவிக்கு 3 ஆவது வாா்டு திமுக வேட்பாளா் அமீா்சுல்தானை எதிா்த்து 17 வது வாா்டு திமுக உறுப்பினா் முகமது காஜா சுகைபு போட்டியிட்டதால் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் அமீா்சுல்தான் 11 வாக்குகளும், அவரை எதிா்த்துப் போட்டியிட்ட முகமது காஜா சுகைபு 10 வாக்குகளும் பெற்றனா். அதன்படிஒரு வாக்கு வித்தியாசத்தில் அமீா்சுல்தான் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

மண்டபம் பேரூராட்சி: இப்பேரூராட்சியில், அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதனைத் தொடா்ந்து, திமுக செயலா் டி. ராஜா மண்டபம் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியின்றி தோ்வாகினா். அதே போல், போட்டியின்றி நம்புராஜன் துணைத்தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். இவா்களுக்கு, தோ்தல் அலுவலரும் பேரூராட்சி செயல் அலுவலருமான மூா்த்தி சான்றிதழ் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.