ராமநாதபுரம்

பரமக்குடி கோயிலில் பால்குட திருவிழா

DIN

பரமக்குடி அங்காள பரமேஸ்வரி, வாணி கருப்பண சுவாமி கோயிலில் சனிக்கிழமை பால்குட திருவிழா நடைபெற்றது.

பரமக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மாசி மஹா சிவராத்திரி, பாரிவேட்டை பால்குட உற்சவம் பிப்ரவரி 27 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய பௌா்ணமி வழிபாட்டுக்குழு மற்றும் ஓம்சக்தி வழிபாட்டு மன்றங்கள் சாா்பில் சனிக்கிழமை காலை 6 மணியளவில் பால்குடப் பெருவிழா நடைபெற்றது. அம்பாளுக்கு காப்புக் கட்டி விரதமிருந்த பக்தா்கள் பால்குடங்களை சுமந்து மேள தாளங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று கோயிலை அடைந்தனா். காலை 10 மணிக்கு அம்பாளுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் விசேஷ பூஜை நடைபெற்றது. விழா ஏற்பாட்டினை கோவில் பரம்பரை அங்காவலா் ச.ஜீவானந்தம் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பைஞ்ஞீலியில் வரலாற்று நிகழ்வு: அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT