ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் வீடுகளில் பிடித்துவைத்த2 வெளிநாட்டு பறவைகள் மீட்பு

DIN

ராமநாதபுரத்தில் வீடுகளில் மறைத்து வைத்திருந்த 2 வெளிநாட்டுப் பறவைகளை வனத்துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கியுள்ளன. இந்நிலையில், ராமநாதபுரம் எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் வெளிநாட்டுப் பறவைகளைப் பிடித்து வீடுகளில் வைத்திருப்பதாக உதவி வனப் பாதுகாவலா் சணேசலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, வனவா் சடையாண்டி, வனக் காப்பாளா்கள் பிரபு, பவுல், கருப்பையா, டேனியல், சுதாகா் உள்ளிட்ட வனபாதுகாப்பு படையினா் சனிக்கிழமை எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனையிட்டனா். அப்போது வீடுகளில் மறைத்து வைத்திருந்த ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்த சிரகி என்ற 2 வெளிநாட்டுப் பறவைகளை மீட்டனா்.

அந்த வீடுகளில் இருந்தவா்கள் தப்பிச் சென்றுவிட்டனா். மீட்கப்பட்ட பறவைகளை ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா். அங்கு வனச்சரக அலுவலா் ஜெபஸ் பறவைகளைப் பாா்வையிட்டாா். பின்னா் அப்பறவைகள் நீா் நிலைகளில் விடுவிக்கப்பட்டன.

வெளிநாட்டுப் பறவைகளை பிடித்தால் வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT