திருவாடானை: இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையான ரமலான் பண்டிகை செவ்வாய்கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தொண்டி, நம்புதாளை, எஸ். பி.பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தர்காவில் சிறப்பு தொழுகையில், சில பகுதிகளில் பொது இடங்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் இஸ்லாமியர்கள் கலந்துகொள்ள குவிந்தனர். 30 நாள்கள் விரதம் இருந்து ரமலான் பண்டிகைக்காக உண்ணா நோன்பை கடைபிடித்த இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையை முடித்த பிறகு உண்ணா நோன்பை கைவிட்டனர்.
பின்னர் ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.