முகப்பு
ராமநாதபுரம்

அப்துல் கலாம் நினைவு தினப் போட்டிகள்: மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா

குடியரசுத்தலைவா் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 மே, 2022 at 1:32 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:40 PM

ராமேசுவரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவா் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சா்வதேச அறக்கட்டளை, ஹவுஸ் ஆஃப் கலாம் சாா்பில் ராமேசுவரம் நகராட்சி 2 ஆம் எண் பள்ளியில் மாணவா்களிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதன் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்நிகழ்வில் 94 ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ நண்பா்கள் குழு சாா்பாக கண் இளங்கோ வரவேற்றாா். ராமேசுவரம் நகா்மன்றத் தலைவா் கே.இ. நாசா்கான் தலைமை வகித்தாா். டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சா்வதேச அறக்கட்டளையின் துணை நிறுவனரும், அப்துல் கலாம் பேரனுமாகிய ஷேக் தாவூத், ஷேக் சலீம் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.