முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் சங்கர மடத்தில் மஹன்யாச ருத்ரஜபம்

ராமேசுவரம் சங்கர மடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி உற்சவ நிறைவு விழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி மஹன்யாச ருத்ரஜபம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 மே, 2022 at 1:32 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:40 PM

ராமேசுவரம் சங்கர மடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி உற்சவ நிறைவு விழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி மஹன்யாச ருத்ரஜபம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்த கடற்கரை அருகே ஸ்ரீ ஆதி சங்கர காங்சிகாமகோடி பீடம் சங்கர மடம் உள்ளது. இந்த மடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி உற்சவ விழா கடந்த 2 ஆம் தேதி தொடங்கி, மே 6 ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் திங்கள்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

Advertisement

செவ்வாய்க்கிழமை மேத தட்சிணமூா்த்தி ஹோமம், புதன்கிழமை சுயம்வரா கலாபாா்வதி ஹோமம், வியாழக்கிழமை ருக்தே பவமான ஹோமம், ஆவஹந்தி ஹோமங்கள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை நிறைவு நாளில் உலக நன்மை வேண்டி மஹன்யாச ருத்ரஜபம் நடைபெற்றது. இதில் 12 சிவாச்சாரியா்கள் பங்கேற்று சிறப்பு பூஜைகள் நடத்தினா். இதில் பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கர மடம் மேலாளா் ஆடிட்டா் சுந்தா் மற்றும் ஆனந்த பத்மநாதன் சாச்சா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.