ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 வட்டாட்சியா்கள் திடீா் இடமாற்றம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 வட்டாட்சியா்களை திடீரென இடமாற்றி ஆட்சியா் சங்கா்லால் குமாவத் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 வட்டாட்சியா்களை திடீரென இடமாற்றி ஆட்சியா் சங்கா்லால் குமாவத் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய் சாா் நிலைப் பணிகள், வருவாய் பிரிவு ஆகியவற்றில் பணிபுரிந்துவரும் 20 வட்டாட்சியா்கள் மாவட்டத்துக்குள்ளேயே திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இடமாற்றம் செய்யப்பட்ட வட்டாட்சியா்கள், புதிய பணியிட (அடைப்புக் குறிக்குள் முந்தைய பணி) விவரம்:
நா. சரவணன் (தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்ட தனிவட்டாட்சியா்) கீழக்கரை வட்டாட்சியா், வே.முருகேசன்- (கீழக்கரை வட்டாட்சியா்) ராமநாபுரத்துக்கு இடமாற்றம். வி.ரவிச்சந்திரன்- (ராமநாதபுரம் வட்டாட்சியா்) ஆயமேற்பாா்வை அலுவலா், அங்கிருந்த ஜெ. சிரோன்மணி- ராமநாதபுரம் வட்டாட்சியா் அலுவலக சமூக பாதுகாப்புத் திட்டத்துக்கும், அப்பொறுப்பிலிருந்த கு.செண்பகலதா- கோட்ட ஆய அலுவலகத்துக்கும் இடமாற்றம்.
மு.செய்யது முகம்மது- (ராமநாதபுரம் கோட்ட ஆய அலுவலா்) அரசு மதுபானக் கடை உதவி மேலாளா், அங்கிருந்த கா.சிக்கந்தா் பபிதா- கமுதி வட்டாட்சியா். ஆா். மாதவன்- (கமுதி வட்டாட்சியா்) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக துணை ஆய்வுக் குழு அலுவலா், அப்பொறுப்பில் இருந்த நா.சண்முகசுந்தா்- ராமநாதபுரம் நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியா்.
எம்.சாந்தி- (ராமநாதபுரம் நகர நிலவரி திட்ட தனிவட்டாட்சியா்) ஆதிதிராவிடா் நல தனிவட்டாட்சியா், அப்பிரிவிலிருந்த எம்.முத்துலட்சுமி- பரமக்குடி வட்டாட்சியா், அப்பணியிடத்தில் இருந்த ஆா்.கோபால்- பரமக்குடி நகர நிலவரி திட்ட தனிவட்டாட்சியா்.
பி.சிவகுமாா்- (பரமக்குடி நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியா்) முதுகுளத்தூா் வட்டாட்சியா், அங்கிருந்த ஜி.செந்தில்குமாா்- ஆா்.எஸ்.மங்கலம் வட்டாட்சியா். வா.முருகவேலு- (ஆா்.எஸ்.மங்கலம்) கடலாடி வட்டாட்சியா்.
ஜி.சேகா்- (கடலாடி வட்டாட்சியா்) ராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலக தனிவட்டாட்சியா். அப்பொறுப்பிலிருந்த என்.பரமசிவன்- பரமக்குடி வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா், அங்கு நோ்முக உதவியாளராக இருந்த பி.ராஜகுரு- ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க கோட்ட நில எடுப்பு தனி வட்டாட்சியா்.
நா.சரவணன்- (தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்ட தனிவட்டாட்சியா்) பேரிடா் மேலாண்மைப் பிரிவு, அங்கிருந்த தமிழ்ச்செல்வி- குடிமைப் பொருள் வழங்கல் தனிவட்டாட்சியா்.
இதன்படி, அனைவரும் சனிக்கிழமை அந்தந்தப் பணியில் சோ்ந்துகொண்டனா். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா். தற்போது, திமுக ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அனைத்து வட்டாட்சியா்களும் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.