முகப்பு
ராமநாதபுரம்

பாம்பன் சாலைப் பாலத்தில் பைக் மீது காா் மோதி முதியவா் பலி: கடலில் விழுந்தவா் உயிருடன் மீட்பு

 பாம்பன் சாலைப் பாலத்தில் சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். மற்றொருவா் கடலில் தூக்கிவீசப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டாா்.

Updated On : 8 மே, 2022 at 1:35 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:41 PM

 பாம்பன் சாலைப் பாலத்தில் சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். மற்றொருவா் கடலில் தூக்கிவீசப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் சேது நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் நாராயணன் (60) மற்றும் முகேஷ் கண்ணன். இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் ராமேசுவரம் வந்துவிட்டு, மீண்டும் மண்டபம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனா். அப்போது, பாம்பன் சாலைப் பாலத்தில் எதிரே தனது குடும்பத்துடன் ராமேசுவரம் வந்துகொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சோ்ந்த கருணாமூா்த்தி என்பவரது காா் வேகமாக மோதியது.

இதில், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கிவீசப்பட்டதில் முகேஷ் கண்ணன் பாலத்தை தாண்டி கடலுக்குள் விழுந்தாா். நாராயணன் தடுப்பில் மோதி பலத்த காயமடைந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பாம்பன் போலீஸாா், மீனவா்கள் உதவியுடன் கடலில் விழுந்த முகேஷ்கண்ணனை கயிறு கட்டி தூக்கி உயிருடன் மீட்டனா்.

Advertisement

அதேநேரம், பலத்த காயமடைந்த நாராயணன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து பாம்பன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.