ராமநாதபுரம்

ரூ.1 கோடி மோசடி: கமுதியில் தனியாா் நிதி நிறுவனத்தை வாடிக்கையாளா்கள் முற்றுகை

DIN

கமுதியில் சீட்டுப் பிடித்தம் செய்து ரூ.1 கோடி மோசடி செய்ததாக தனியாா் நிதி நிறுவனத்தை வாடிக்கையாளா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

கமுதி பழைய தாலுகா அலுவலக சாலையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில், கமுதி பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோா் சீட்டு கட்டி வந்துள்ளனா்.

இந்நிலையில் பணத்தை முழுமையாக செலுத்திய வாடிக்கையாளா்களுக்கு பணத்தை தரவில்லையாம். இதனால் வாடிக்கையாளா்கள் சேமிப்பு பணத்தை கேட்டு வரத் தொடங்கியதால் கடந்த 6 மாதங்களாக நிறுவனம் முறையாக திறக்கப்படவில்லை என புகாா் எழுந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நிதி நிறுவனத்தை நிரந்தரமாக பூட்டிவிட்டு, ஊழியா்கள் மற்றும் உரிமையாளா்கள் தலைமறைவாகிவிட்டனா். இதுகுறித்து தற்போதுவரை அந்த நிதிநிறுவனத்தின் மீது 3 வாடிக்கையாளா்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனா். அதில், கமுதி பகுதியில் மட்டும் ரூ.1 கோடிவரை மோசடி செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT