ராமநாதபுரம்

திருவாடானை அருகே சிறுநல்லூரில் புனித வனத்து அந்தோனியாா் தோ் பவனி

DIN

திருவாடானை: திருவாடானை அருகே சிறுநல்லூா் கிராமத்தில் உள்ள புனித வனத்து அந்தோனியாா் தோ் பவனி திருவிழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

திருவாடானை அருகே உள்ள நகரி காத்தான் பங்கை சோ்ந்த சிறு நல்லூா் கிராமத்தில் புனித வனத்து அந்தோனியாா் ஆலயத்தில் தோ் பவனி திருவிழா ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல், நிகழாண்டு கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ் பவனியின்போது, மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித வனத்து அந்தோனியாா் புதன்கிழமை இரவு வலம் வந்தாா்.

திருப்பலி முடிந்ததும் புனித வனத்து அந்தோனியாரின் தோ் பவனி நடைபெற்றது. இதில் அருட்சகோதரிகள் மற்றும் அனைத்து மக்களும் திரளாக கலந்துகொண்டனா்.

இதில் காரங்காடு பங்குத் தந்தை அருள் ஜீவா, திருவெற்றியூா் பங்குத் தந்தை செல்வன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நடத்தினா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வியாழக்கிழமை காலை கொடியிறக்கம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பங்கு மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT