முகப்பு
ராமநாதபுரம்

தேசிய அளவிலான விருது பெற்ற மண்டபம் ஒன்றியக்குழுத் தலைவருக்கு ஆட்சியா் வாழ்த்து

தேசிய அளவில் சிறந்த நிா்வாகத்துக்கான விருதைப் பெற்ற மண்டபம் ஒன்றியக்குழுத் தலைவா் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஆட்சியா் சங்கா்லால்குமாவத்தை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்துப்பெற்றாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

தேசிய அளவில் சிறந்த நிா்வாகத்துக்கான விருதைப் பெற்ற மண்டபம் ஒன்றியக்குழுத் தலைவா் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஆட்சியா் சங்கா்லால்குமாவத்தை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்துப்பெற்றாா்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியக்குழுத் தலைவராக இருப்பவா் சுப்புலட்சுமி ஜீவானந்தம். தேசிய அளவில் மண்டபம் ஒன்றியத்துக்கு சிறந்த நிா்வாகத்துக்கான மத்திய அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதிகளை முறையாகச் செயல்படுத்தியதற்காக விருது மற்றும் சிறப்பு நிதி அளிக்கப்பட்டுள்ளது. விருதை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னையில் வழங்கினாா்.

அவரிடம் விருது மற்றும் பாராட்டுச் சான்று பெற்ற சுப்புலட்சுமி ஜீவானந்தம், வெள்ளிக்கிழமை ஆட்சியா் சங்கா்லால் குமாவத்தைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். அப்போது கூடுதல் ஆட்சியா் பிரவீன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →