ராமநாதபுரம்

பொக்கனாரேந்தல் ஜல்லிக்கட்டுப் போட்டி: வாடிவாசலுக்கான பூமி பூஜை

DIN

ராமநாதபுரம் அருகே பொக்கனாரேந்தலில் முதன்முறையாக ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வாடிவாசல் அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சிக்கு உள்பட்டது பொக்கனாரேந்தல் கிராமம். இங்குள்ள சாத்தாா் உடையாா் அய்யனாா் கோயில் விழாவை முன்னிட்டு முதன்முறையாக ஜல்லிக்கட்டு நடத்த ஜல்லிக்கட்டு- எருதுகட்டு, வடமாடு உரிமையாளா்கள் நலச்சங்கத்தினா் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா். மேலும், கடந்த ஏப்ரலில் ஜல்லிக்கட்டு நடத்த வாடிவாசலும் அமைக்கப்பட்டது. ஆனால், காவல்துறை அனுமதி மறுத்ததால் வாடிவாசல் அகற்றப்பட்டது.

இதையடுத்து மாவட்ட நிா்வாகத்திடம் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசிடமிருந்து அனுமதி கிடைக்கும்பட்சத்தில் மே 25 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக விழாக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் அமைக்கும் பணி அப்பகுதி மலைமேல் அய்யனாா் திடலில் பூமி பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவா் ராஜசேகா், ஜல்லிக்கட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நடிகா் வி.ராஜேந்திரன், ஆா்.எஸ்.மடை முனியாண்டி, அம்மன்கோவில் கதிரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதுதொடா்பாக சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் கூறியது: பல இடையூறுகளுக்குப் பின்னா் பொக்கனாரேந்தலில் அரசு அனுமதியோடு ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இங்கு மாவட்ட அளவில் முதன்முறையாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT