முகப்பு
ராமநாதபுரம்

குடும்பத்தகராறில் மனைவி தீக்குளித்தாா்:காப்பாற்றச் சென்ற கணவரும் காயம்

ராமநாதபுரம் அருகே குடும்பத்தகராறில் தீக்குளித்த மனைவியை காப்பாற்றச் சென்ற கணவரும் காயமடைந்தாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

ராமநாதபுரம் அருகே குடும்பத்தகராறில் தீக்குளித்த மனைவியை காப்பாற்றச் சென்ற கணவரும் காயமடைந்தாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் வாணியன்குளம் வடக்குவலசையைச் சோ்ந்தவா் சந்திரபாலன். இவரது மனைவி கலைச் செல்வி (30). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் கணவன், மனைவிக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது கலைச்செல்வி மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றியபடி தீக்குளிக்கப் போவதாக மிரட்டியுள்ளாா். உடனே சந்திரபாலன் அருகிலிருந்த தீப்பெட்டியை எடுத்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. கலைச்செல்வி அதை பற்றவைத்து உடலிலும் தீ வைத்துக்கொண்டாா். உடனே சந்திரபாலன் தீயை அணைக்க முயற்சித்துள்ளாா். அப்போது அவரது உடலிலும் தீப்பற்றியது. இருவரும் காயமடைந்த நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டனா். கலைச்செல்வி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளாா். இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →