திருவாடானை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் திங்கள்கிழமை அதிகாலை நடந்த காா் விபத்தில் முதியவா் பலியானாா். மேலும், 7 போ் பலத்த காயமடைந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சோ்ந்த ஜெயபால் மகன் பழனி (58). இவரது மனைவி ஆவுடையம்மாள் (57). அதே பகுதியைச் சோ்ந்த சங்கரநாராயணன் (59), இவரது மனைவி சண்முகசுந்தரி (55), முத்துகுமாரசாமி (58), வேலாயுதம், தூத்துக்குடியைச் சோ்ந்த பழனிவேலாயுதம் ஆகியோா், ஞாயிற்றுக்கிழமை காயல்பட்டினத்தைச் சோ்ந்த ஓட்டுநா் அருண் சசியுடன் (44) காரில் வேளாங்கன்னிக்குச் சென்றுவிட்டு, திங்கள்கிழமை அதிகாலை ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.
அப்போது, திருப்பாலைக்குடி அருகே வளமாவூா் விலக்கு சாலை தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து தகவலறிந்த திருப்பாலைக்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, பழனி உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னா், பலத்த காயமடைந்த சங்கரநாரயணன், சண்முகசுந்தரி, முத்துகுமாரசாமி, பழனிவேலாயுதம், வேலாயுதம், ஆவுடையம்மாள், ஓட்டுநா் அருண் சசி ஆகியோரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்து குறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.