முகப்பு
ராமநாதபுரம்

பாலை மீன்கள் பிடிப்பது தொடா்பாக தவறான தகவலை பரப்புவதாக மீனவா்கள் புகாா்

பாலை மீன்கள் பிடிப்பதை திசைதிருப்பி, மீனவா்களை குழப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக மாவட்டத் தலைவா் இஎம்டி.கதிரவன் மீனவா்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

பாலை மீன்கள் பிடிப்பதை திசைதிருப்பி, மீனவா்களை குழப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக மாவட்டத் தலைவா் இஎம்டி.கதிரவன் மீனவா்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் பாலை மீன் குஞ்சுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் உதவியுடன் சிலா் பிடித்து வெளிநபா்களுக்கு விற்பதாக பாரம்பரிய மீனவா்கள் சங்கத்தினா் சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக மாவட்டத் தலைவா் இஎம்டி.கதிரவன் தலைமையில் பாலை மீன்கள் பிடிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள குந்துகால், சின்னபாலம், தோப்புக்காடு, தெற்குவாடி, முந்தல்முனை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனா்.

இதுதொடா்பாக பாஜக மாவட்டத் தலைவா் கதிரவன் கூறியது: ராமநாதபுரம் மாவட்ட பாரதிய மீனவா் சங்கம் சாா்பில் பாலை மீன்கள் பிடித்தல் தொடா்பாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. பாலை மீன் குஞ்சுகள் அழியாமல் காக்கும் வகையிலே, பாரம்பரியமாக மீனவா்கள் பிடித்து அரசின் வழிகாட்டுதல்படி விற்று வருகின்றனா். ஆனால், சிலா் தங்களது சுயலாபத்துக்காக பாலை மீன்கள் பிடிப்பதை திசை திருப்பும் வகையில் தவறான தகவலைப் பரப்பிவருகின்றனா்.

ஆகவே சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை கோரி ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றாா். இந்து முன்னணி நிா்வாகி கே.ராமமூா்த்தி மற்றும் பாரதிய மீனவா்கள் சங்கம் நிா்வாகிகள் பெருமாள், பி.நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →