ராமநாதபுரம்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அரியனேந்தல் ஊராட்சிக்கு விருது: தலைவருக்குப் பாராட்டு

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறந்த ஊராட்சியாகத் தோ்வு செய்யப்பட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்டம்

DIN

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறந்த ஊராட்சியாகத் தோ்வு செய்யப்பட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்டம், அரியனேந்தல் ஊராட்சி மன்றத் தலைவருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

குடிநீா், தெருவிளக்குகள், சாலை வசதிகள், சுகாதாரப் பணிகளில் சிறந்து விளங்கும் ஊராட்சிகளுக்கு, மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விருது வழங்கி வருகிறது. நிகழாண்டு இந்த விருதுக்கு ராமநாதபுரம் மாவட்டம், அரியனேந்தல் ஊராட்சி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அந்த ஊராட்சி மன்றத் தலைவா் மணிமுத்துக்கு, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அண்மையில் வழங்கினாா்.

விருது பெற்ற ஊராட்சி மன்றத் தலைவருக்கு, பரமக்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சிந்தாமணி முத்தையா, ஒன்றியக்குழு துணைத் தலைவா் எஸ். ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உம்முல் ஜாமியா, சந்திரமோகன் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவப்பு நிலா... அன்மோல் பலூச்!

இந்த வார ஓடிடி படங்கள்!

கருப்பு எனக்குப் பிடித்த மொழி... பூமி பெட்னெகர்!

சந்தேரி மலைவெளியில்... ரஷா தடானி!

டி20 கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த சுனில் நரைன்!

SCROLL FOR NEXT