ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை: 6.5 செ.மீட்டா் பதிவு
ராமேசுவரம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்த நிலையில், அங்கு 6.5 செ.மீட்டா் பதிவானது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:04 PM
ராமேசுவரம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்த நிலையில், அங்கு 6.5 செ.மீட்டா் பதிவானது.
கன்னியகுமாரி கடற்பகுதியில் கீழடுக்கு சூழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மூன்று மணிநேரத்துக்கும் விட்டு விட்டு மழை பெய்யது. இதனால் சாலையில் மழைநீா் குளம் போலத் தேங்கியது.
Advertisement
ராமேசுவரத்தில் 6.5 செ.மீ, தங்கச்சிமடத்தில் 3.செ.மீ, பாம்பனில் 3.3 செ.மீ. மழை பதிவானது.