மண்டபம் அருகே இறந்து கரை ஒதுங்கிய கடல் பசு மீட்பு
மண்டபம் அருகேயுள்ள புதுமடம் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசுவை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்
மண்டபம் அருகேயுள்ள புதுமடம் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசுவை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் காணப்படும் பாலூட்டி இனமான கடல் பசு மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதால், அதைப் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாக்கப்பட்ட உயிரினமாகவும் இது உள்ளது.
இந்த நிலையில், மண்டபத்தை அடுத்துள்ள புதுமடம் மன்னாா் வளைகுடா கடற்கரையில் சுமாா் 5 வயதுடைய, 700 கிலோ எடை கொண்ட கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மீனவா்கள், வனத் துறையினருக்கு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தாா்.
Advertisement
இதையடுத்து, அலுவலா் மகேந்திரன் தலைமையிலான வனத் துறையினா் அங்கு சென்று, அந்தக் கடல் பசுவின் சடலத்தை மீட்டு ஆய்வு செய்தனா். பின்னா், கால்நடை மருத்துவா் மூலம் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, கடற்கரையிலேயே அதன் சடலம் புதைக்கப்பட்டது.