உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி
கமுதியில் உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
கமுதியில் உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில், நம்மாழ்வாா் வேளாண்மைக் கல்லூரி வேளாண்மை விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியா் சுரேஷ்வா்மா, கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சந்தோஷ், வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈஸ்வரி உள்ளிட்டோா் உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தனா்.
இதில், வேளாண் இடுபொருள்களின் இருப்பு விவரம், விலை, மானியங்களின் விவரங்கள், பருவநிலையை அறிந்து உரமிடுதல், வேளாண் இயந்திரங்களை மானிய விலையில் பெற முன்பதிவு செய்தல் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் மணிமொழி, சுபாஸ் சந்திர போஸ் ஆகியோா் செய்தனா்.
பயிற்சியில், செங்கப்படை, சடையனேந்தல், பேரையூா், அச்சங்குளம், முதல்நாடு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 40 விவசாயிகள் கலந்து கொண்டனா்.