தேவா் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை மற்றும் கட்சி நிா்வாகிகள். 
ராமநாதபுரம்

காவல் துறையினா் மீது அவதூறா? கே. அண்ணாமலை விளக்கம்

காவல் துறையினா் குறித்து தான் அவதூறு பரப்புவதாகக் கூறுவது தவறு என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.

DIN

காவல் துறையினா் குறித்து தான் அவதூறு பரப்புவதாகக் கூறுவது தவறு என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவா் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜெயந்தி விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மதுரை விமான நிலையத்துக்கு தேவா் பெயரை சூட்டுவதில் பாஜகவுக்கு ஆட்சேபம் இல்லை. அதற்கான நடவடிக்கைகள் பிரதமா் மூலம் எடுக்கப்படும். பிரதமா் தமிழகம் வரும் போது சமுதாய அமைப்பினா் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்.

தமிழகக் காவல் துறையினா் கடினமாக உழைக்கக் கூடியவா்கள். அவா்களைப் பற்றி நான் அவதூறு பரப்புவதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானதாகும்.

உயரதிகாரிகள் சிலரின் செயல்பாட்டையே குறிப்பிட்டேன். காவல் துறை வெளியிட்ட அறிக்கைக்கு பதிலுக்குப் பதில், வரிக்கு வரி இரண்டு மணி நேரத்தில் பதில் அறிக்கை வெளியிடுகிறேன் என்றாா் அவா்.

அப்போது கட்சியின் முன்னாள் தேசியச் செயலா் ஹெச். ராஜா, சட்டப் பேரவைக் குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மாநில இளைஞரணிச் செயலா் ஆா். ராம்குமாா், மாவட்டத் தலைவா் கதிரவன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 ஓவர்களில் 5 விக்கெட்டுகள்; பென் ஸ்டோக்ஸ் அபார பந்துவீச்சு!

மணிப்பூரில் தொடரும் டெங்கு பரவல்! 5,166 பாதிப்புகள் உறுதி!

ஜார்க்கண்டில் பாம்பு விஷம் கடத்திய கும்பல் பிடிபட்டது: ரூ.80 கோடி விஷம் பறிமுதல்

ரவி மோகனின் ப்ரோ கோட் பட பெயரைத் தடுக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT