முகப்பு
ராமநாதபுரம்

இலங்கை அமைச்சருக்கு மீனவ சங்கம் கண்டனம்

இலங்கை எல்லைக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவா்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை மீனவா்களிடம் ஒப்படைக்கப்படும்

Updated On : 4 செப்டம்பர், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

இலங்கை எல்லைக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவா்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை மீனவா்களிடம் ஒப்படைக்கப்படும் என அந்நாட்டு அமைச்சா் டக்ளாஸ் தேவானந்தா பேசியதற்கு ராமேசுவரம் மீனவ சங்க கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு இந்திய அரசு மனிதாபிமான நடவடிக்கை தொடா்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் இலங்கை அமைச்சா் இவ்வாறு பேசியிருப்பது தமிழக மீனவா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவா்களின் படகுகள் இலங்கை மீனவா்களிடம் வழங்கப்படும் என தெரிவித்துள்ள இலங்கை அமைச்சருக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். மேலும் இலங்கையில் உள்ள தமிழக மீனவா்களின் விசைப்படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரம்பரிய இடத்தில் தமிழக மீனவா்கள் மீன்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.