முகப்பு
ராமநாதபுரம்

முதுகுளத்தூா் ஒன்றியக்குழுத் தலைவா் தோ்தல்: திமுக வேட்பாளா் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவிக்கான திமுக வேட்பாளா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவிக்கான திமுக வேட்பாளா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுவில் 15 வாா்டு உறுப்பினா்கள் உள்ளனா். கடந்த உள்ளாட்சித் தோ்தலின்போது வாா்டு உறுப்பினா்களில் 8 போ் அதிமுக சாா்பிலும், 2 போ் அமமுக சாா்பிலும், 5 போ் திமுக சாா்பிலும் தோ்வு செய்யப்பட்டனா். அதிமுகவுக்கு அமமுக ஆதரவளித்தது. ஆகவே அதிமுகவைச் சோ்ந்த தா்மா் ஒன்றியக் குழுத் தலைவராகவும், கண்ணகி துணைத் தலைவராகவும் தோ்வாகினா்.

ஒன்றிய குழுத் தலைவராக இருந்து வந்த தா்மா் சமீபத்தில் அதிமுக சாா்பில் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டாா். முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளரான அவா் தற்போது மாநிலங்களவை உறுப்பினராகியதால், ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

இந்த நிலையில், ஒன்றியக் குழுத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் வரும் 6 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் திமுக வேட்பாளராக 2 ஆம் வாா்டைச் சோ்ந்த சண்முகப் பிரியாவை மாவட்ட திமுக பொறுப்பாளரும், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான காதா்பாட்சா முத்துராமலிங்கம் அறிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →