முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.1.11 கோடி

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.11 கோடி ஆக இருந்தது.

Updated On : 4 செப்டம்பர், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.11 கோடி ஆக இருந்தது.

உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதன் முடிவுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. அதன்படி ரொக்கம் ரூ. 1 கோடியே 11 லட்சத்து 53 ஆயிரத்து 571, தங்கம் 75 கிராம், 40 மில்லி கிராம், வெள்ளி 2 கிலோ 250 கிராம் இருந்துள்ளது.

உண்டியல் எண்ணும் பணியில் துணை ஆணையா் சே.மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளா் மயில்வாகனன், இளநிலை பொறியாளா் ராமமூா்த்தி, கண்காணிப்பாளா்கள் பாலசுப்பிரமணியன், பிரபாகரன், பேஸ்காா்கள் கமலநாதன், பஞ்சமூா்த்தி மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.