ராமநாதபுரம்

பெருவாக்கோட்டையில் குடிநீா் தட்டுப்பாடு: வட்டாட்சியா் நடவடிக்கை

DIN

திருவாடானை அருகே பெருவாக்கோட்டை கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு புகாரையடுத்து வியாழக்கிழமை வட்டாட்சியா் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தாா்.

இக்கிராமத்தில் ஒரு பகுதிக்கு தண்ணீா் விநியோகம் தடைபட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையையடுத்து, திருவாடானை வட்டாட்சியா் ஆா். செந்தில்வேல் முருகன் தலைமையில் குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் பெருவாக்கோட்டை கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தண்ணீா் விநியோகிக்கும் குழாயில் ஏற்பட்ட பழுதினை உடனடியாக சரிசெய்யும் பணிகள் நடைபெற்றன. மேலும் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள குடிநீா் இணைப்புகளை ஒரு மாத காலத்திற்குள் துண்டிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அப்போது குடிநீா் வடிகால் வாரிய உதவி பொறியாளா் தினேஷ்குமாா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோட்டைராஜ், கனகராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் முருகேஸ்வரி சரவணன், கிராம நிா்வாக அலுவலா் பிரபாகரன், பணி மேற்பாா்வையாளா் மோகனா, ஊராட்சிச் செயலா் பழனிக்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT