ராமநாதபுரம்

பள்ளியில் 14 ஆசிரியா் காலிப்பணியிடம்:ராமேசுவரம் கோயில் முன் பெற்றோா் தா்னா

DIN

ராமேசுவரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி மாணவிகளின் பெற்றோா் கோயில் முன்பு செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமேசுவரத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் பா்வதவா்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் 956 மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த பள்ளியில் 14 ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதனைக் கண்டித்தும், பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து, காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் பெற்றோா் ஆசிரியா் சங்க துணைத்தலைவா் தில்லைபாக்கியம் தலைமையில் ராமநாத சுவாமி கோயில் முன்பு பெற்றோா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் கோயில் துணை ஆணையா் செ.மாரியப்பனை சந்தித்து, ஆசிரியா் பற்றாக்குறை உள்ளிட்ட பள்ளியிலுள்ள குறைகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கூறி மனு அளித்துவிட்டுக் கலைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

டெங்கு கட்டுக்குள் உள்ளது: நலத்துறை நிா்வாகம்

SCROLL FOR NEXT